உயிர்நேய ஒப்பிலாக் குருதிக்கொடை
யாரெல்லாம் இரத்தம் கொடுக்கலாம்!
- 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட யார்வேண்டுமானாலும் குருதிக் கொடை அளிக்கலாம்.
- எடை 45 கிலோவுக்கு குறையாமல் இருக்கவேண்டும்.
- ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும். பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் குருதிக்கொடை அளிக்கலாம்.
- உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
யாரெல்லாம் இரத்தம் கொடுக்கக் கூடாது!
- டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள் சிகிச்சைப்பெற்று 6 மாதங்கள் வரை குருதிக்கொடை அளிக்கக்கூடாது.
- மது அருந்தியவர்கள் 24 அடுத்த மணி நேரம் வரை குருதி அளிக்கக்கூடாது.
- மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை குரிதிக்கொடை அளிக்கக்கூடாது.
- கர்ப்பிணிகள், தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் ஓராண்டு வரை குருதிக்கொடை அளிக்கக்கூடாது.
- HIV, மஞ்சள்காமாலை தொற்றுள்ளவர்களின் குருதிக்கொடை அளிக்கக்கூடாது.
- இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் குருதிக்கொடை அளிக்கக்கூடாது.
தட்டை அணுக்கள் தானம் செய்வதற்கு என்னென்ன தேவைகள்!
- குருதிக்கொடை செய்யக்கூடிய எவரும் தட்டை அணுக்கள் தானம் செய்வதற்கு ஏற்றவர்கள்.
- 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் தட்டை அணுக்கள் கொடுக்கலாம்.
- உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பவர்கள் மட்டுமே தட்டை அணுக்கள் அளிக்க தகுதியானவர்கள்.
- எலுப்பு மஜ்ஜையிலுள்ள மெகாகேரியோசைட் எனப்படும் ஒருவகை பெரிய செல்லிலிருந்து தான் உருவாகின்றன.
- 15000 மேல் தட்டை அணுக்கள் அளவை கொண்டு இருக்க வேன்டும். எடை 58 கிலோவிற்கும் அதிகமாக இருக்க வேண்டும்..
- இரத்த அழுத்தம் 120 - 70 ஆக இருக்க வேண்டும்.
- கொடை செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆஸ்பிரின் எடுக்க கூடாது.
- நல்ல புர சிறை அணுக்கள் இருந்தால் குருதி மற்றும் தட்டை அணுக்களை பிரித்தெடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
அரசு தொடர்பு என் : 1910
திலீபன் குடில் : 044-47731100
