நடப்பு நிகழ்வுகள்
அண்ணனின்
வாழ்த்துரை !!!
“குருதிக்கொடை அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக் காக்கவும் உலக குருதிக்கொடையாளர் தினத்தில்(சூன் 14) ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்.
குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும் என்ற உயரிய நோக்கில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திலேயே அதிக குருதிக்கொடை வழங்கும் அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.
நோய்த்தொற்று தாக்கத்தால் சமூகமே பேரிடரின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் அசாதாரண சூழலில், குருதிக்கொடையின் அவசியத்தை உணர்த்தி, அதனை பெரும் சமூக இயக்கமாக முன்னெடுக்கவும் அதன் தேவையை அனைவரும் உணரும்படி செய்து, பங்கேற்பாளராக மாற்றவும் தீவிரப் பரப்புரையை முன்னெடுப்போம்.”
– அண்ணன் சீமான் ( தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி)