உடல் உறுப்புக் கொடை

முதல் வகை!

உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்புகளை கொடை செய்வது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளே அவர்களுக்காகத் தங்களது உறுப்புகளை கொடை செய்வார்கள். ஒருவரின் சிறுநீரகம். கல்லீரலின் ஒரு பகுதி கணையத்தின் ஒரு பகுதி என கொடை செய்வார்கள்.

இரண்டாம் வகை!

இயற்கையாக மரணமடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை கண்கள், இதய வால்வு. தோல், எலும்புகள் ஆகியவற்றை அவரது குடும்பத்தாரின் அறுமதியுடன் கொடை செய்வது. அதுபோன்று மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் போன்றவையும் கொடையாக அளிக்கப்படுகிறது: ஒருவர் உடல் உறுப்பு கொடை செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேரிலிருந்து அதிகபட்சமாக 12 பேர் வரையிலும் காப்பாற்ற முடியும்.

எந்த உறுப்புகளை எந்த வயது வரை கொடை செய்யலாம்!

  • 70 வயது வரை ஒருவரது சிறுநீரகங்கள். கல்லீரல்.
  • எலும்பு போன்றவற்றை கொடை செய்யலாம்.
  • 50 வயது வரை ஒருவரது இதயம், இதய வால்வுகள்.
  • நுரையீரல் கொடை செய்யலாம்.
  • 60 - 65 வயது வரை கணையம், குடல் கொடை அளிக்க முடியும்.
  • 100 வயது வரை கார்னியா. தோல் கொடையளிக்க முடியும்.
திலீபன் குடில் : 812254051 உடல் உறுப்பு கொடை : 044-47731100
Join As
Join As
Blood Request
Blood Request!